விஜய்-அட்லி படத்தின் தலைப்பு காக்கி? - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 15 October 2015

விஜய்-அட்லி படத்தின் தலைப்பு காக்கி?

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், ராதிகா சரத்குமார், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்படிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் போலீஸாக நடிக்கிறார். அதனால், ரஜினி, போலீஸ் அதிகாரி, ரவுடி உள்ளிட்ட மூன்று கெட்டப்புகளில் நடித்து அசத்திய ‘மூன்று முகம்’ படத்தின் தலைப்பை வைக்க முடிவு செய்தனர். ஆனால், அந்த தலைப்பு கிடைக்காமல் போனது.

எனவே, அதை தவிர்த்து வேறு ஒரு புதிய தலைப்பை வைக்க நிறைய தலைப்புகளை பரிசீலித்து வந்தனர். கடைசியாக, ‘காக்கி’ என்ற தலைப்பை படக்குழுவினர் இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

‘காக்கி’ என்ற பெயரில் ஏற்கெனவே சரத்குமார் நடிப்பில் ஒரு படம் உருவாகி பாதியிலேயே நின்றுவிட்டது. எனவே, இந்த தலைப்பை அவர்கள் விட்டுக் கொடுக்க தயாரானால், இதையே படத்தின் தலைப்பாக வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages