பேயாக இருந்து போலீசாக மாறிய லாரன்ஸ் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 15 October 2015

பேயாக இருந்து போலீசாக மாறிய லாரன்ஸ்


சமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘காஞ்சனா 2’  படம் சூப்பர் ஹிட்டானது. அவர் இயக்கிய ‘முனி’, ‘காஞ்சனா’ ஆகிய வெற்றி படங்கள் வரிசையில் ‘காஞ்சனா 2’ படமும் அமைந்தது. பேய் படமாக வெளியான இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. பேயாக நடித்து வந்த லாரன்ஸ் தற்போது போலீசாக மாற இருக்கிறார்.

ஜீவா நடிப்பில் வெளியான ‘சிங்கம் புலி’ படத்தை இயக்கிய சாய் ரமணி இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க லாரன்ஸ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

லாரன்ஸ் இப்படத்தை தவிர ‘மொட்டை சிவா கெட்ட சிவா’,  ‘நாகா’ என்னும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages