காந்திகிராமம்:மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே வளரக்கூடிய 10 வகை
அரிய வகை மரங்கள், காந்தி கிராம பல்கலை கண்காட்சியில்
காட்சிப்படுத்தப்பட்டன.காந்திகிராம பல்கலையின் உயிரியில் துறை, நாட்டு
நலப்பணித் திட்டம், சூழல்குழு சார்பில், விலங்குகள், தாவரங்களை
அழிவிலிருந்து காப்பது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி, குறும்பட காட்சி
காட்சிப்படுத்தப்பட்டன.
துணை வேந்தர் நடராஜன் துவக்கி வைத்தார். உயிரியியல் துறை உதவி பேராசிரியர் ராமசுப்பு, ஆராய்ச்சி மாணவர்கள் கண்காட்சியை வழிநடத்தினர்.
உதவிபேராசிரியர் கூறியதாவது: கோவா முதல் கன்னியாகுமரி வரை மேற்கு தொடர்ச்சி மலை 1,600 கி.மீ.,நீண்டுள்ளது. இங்கு 5, 860 வகை தாவரயினங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில்,'எண்டமிக்' எனப்படும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் 1,600 தாவரங்கள் உள்ளன.
அதில் பல்கலை சார்பில் 500க்கும் மேற்பட்ட மரங்கள் குறித்த ஆய்வுகள் நடக்கின்றன. விலங்கினங்கள் என்றால் விலங்குகள் மட்டுமே என மாணவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். வன உயிரினங்களில் இயற்கை வாழ்வியல் சுழற்சி முறையில் பூக்கும் தாவரங்கள், பூவா தாவரங்கள், பூச்சியினங்கள், ஊர்வனயினங்கள், பறவைகள்,
பாலுாட்டிகள் அடங்கும்.இதில் வன உயிரினங்கள் பல்வகை அதிசய குணத்தை கொண்டுள்ளன. கண்காட்சியில் எங்களது ஆய்வில் உள்ள மிக அரிய வகையான ஆரோக்கியபச்சை, காட்டுத் திப்பிலி,
காட்டுநாவல், செம்மரம், ஜாதிக்காய், அசோகமரம், சூடமரம், ருத்ராட்சம்,மஞ்சகஞ்சி, குரங்குநாவல்உள்ளிட்ட மரக்கன்றுகளை காட்சிப்படுத்தி உள்ளோம்.
இவை மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே வளர கூடியவை. உலகில் வேறு எங்கும் இவ்வகை மரங்கள் இருக்காது, என்றார்.

No comments:
Post a Comment