நடிகை சங்கீதா மீது ஆபாச அர்ச்சனை.. விஷால் கன்னத்தில் பளார் என அறைந்த முக்கிய நடிகர்.. புதிய பரபரப்பு - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 18 October 2015

நடிகை சங்கீதா மீது ஆபாச அர்ச்சனை.. விஷால் கன்னத்தில் பளார் என அறைந்த முக்கிய நடிகர்.. புதிய பரபரப்பு


சென்னை: நடிகர் சங்கத் தேர்தலின்போது வாக்குச் சாவடிக்குள் பூத் ஸ்லிப்புடன் வந்த நடிகை சங்கீதாவை முக்கிய நடிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். பதிலுக்கு நீங்கள் யார் என்னைக் கேட்க என்று சங்கீதா கேட்க அதைத் தொடர்ந்து அந்த நடிகர், சங்கீதாவை மிக அசிங்கமாக திட்டியதாகவும், இதுவே மோதலுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் சங்க தேர்தலில் இன்று திடீர் மோதல் வெடித்தது. விஷால் இதில் தாக்கப்பட்டதாக பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் மோதலுக்கு என்ன காரணம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குப் பதிவின்போது நடிகை சங்கீதா வாக்களிக்க வந்துள்ளார். அவரது கையில் பூத் ஸ்லீப் மற்றும் சில பேப்பர்கள் இருந்துள்ளன. இதைப் பார்த்த முக்கிய நடிகர் ஒருவர், இதெல்லாம் எதற்கு கொண்டு வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் நடிகை சங்கீதா, அதைக் கேட்க நீங்கள் யார், உங்களுக்கு இப்போது பேசத் தகுதியில்லை. நீங்கள் பொறுப்பில் இல்லை என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அந்த நடிகர் சங்கீதாவை மிகவும் ஆபாசமாகவும், தாறுமாறாகவும் திட்டியதாக தெரிகிறது. மேலும் அவருடன் இருந்த இன்னொரு முக்கிய நடிகரும், சங்கீதாவை கடுமையாக பேசியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விஷால் ஓடி வந்துள்ளார். அப்போது அந்த முக்கிய நடிகர் விஷால் கன்னத்தில் பளார் என அறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் நிலை குலைந்த அவரை, அந்த முக்கிய நடிகருக்கு அருகில் இருந்த கும்பல் பாய்ந்து வந்து தாக்க முயன்றதாகவும், அருகில் இருந்தோர் தடுத்து விட்டதால் விஷால் தப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages