சென்னையில் சிம்பு ரசிகர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 28 December 2015

சென்னையில் சிம்பு ரசிகர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

                                        
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் சிம்பு ரசிகர்களை போலீஸார் எச்சரித்து கலைந்துபோகச் செய்தனர்.
ஆபாச பாடல் இயற்றி பாடியதாகக்கூறி நடிகர் சிம்புவுக்கு எதிராக போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவிலுள்ள அவரது வீட்டு முன்பும் சிம்புவைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், கொடும்பாவி எரிப்பு, படம் அவமதிப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சிம்புவுக்கு ஆதரவு தெரிவித்தும், சிம்புவுக்கு எதிராக போராடுபவர்களை கண்டித்தும் சென்னை மாவட்ட சிம்பு ரசிகர் மன்றத்தினர் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வந்திருந்த ரசிகர்கள், சிம்புவின் பழைய வீட்டின் முன்பு கூடினார்கள். அங்கு செய்தியாளர்களிடம் சிம்பு ரசிகர் மன்றத்தினர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஹரிஹரன் கூறும் போது, "’பீப்’ பாடல் தற்போது பெரும் சர்ச்சையாக உருவாகி இருக்கிறது. இப்பாடல் அதிகாரப்பூர்வமற்று வெளியான பாடல். சிம்பு தனிப்பட்ட முறையில் இப்பாடல் வெளியிடவில்லை. இப்பாடலை வெளியிட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று தான் நாங்களே புகார் அளித்திருக்கிறோம். மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான், இப்பாடலை முழுமையாக கேட்டீர்களா, இதற்கு அர்த்தம் என்ன என்று தெரியுமா?
அடிடா அவள, வெட்டுற அவள என்ற பாடல் வெளியான போது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நீங்கள், இப்பாடலுக்கு ஏன் வழக்கு தொடர்கிறீர்கள். பீப் ஒலிக்குப் பின்னால் இருக்கும் வார்த்தை பற்றி நான் பேசவில்லை. அதனைத் தொடர்ந்து இருக்கும் வரிகள் அனைத்துமே பெண்களை ஏன் திட்டுகிறீர்கள், உங்களை நீங்களே திட்டிக் கொள்ளுங்கள் என்று பொருள்படும் படி தான் இருக்கிறது. பெண்களுக்கு முழுக்க ஆதரவு தெரிவித்து தான் அப்பாடல் அமைந்திருக்கிறது.
சிம்பு மீது திட்டமிட்டு, சூழ்ச்சி செய்து அவர் பெண்களுக்கு எதிரானவர் என்று மக்களிடம் கொண்டு போய் சேர்கிறார்கள். பலரும் இதைப் பற்றி பேசி பெரியவிஷயமாக ஆக்கிவிட்டார்கள். சிம்பு ஒடி ஒளிந்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகிறது. அவர் என்ன தவறு செய்துவிட்டார் ஓடி ஒளிவதற்கு. அவருடைய வீட்டில் தான் இருக்கிறார். டி.ஆர் சாரும் நீங்கள் என் பையனை எங்கே ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் ஒப்படைக்கிறேன் என தெரிவித்திருக்கிறார். இதற்கு மேல் ஒருவர் என்ன பண்ண வேண்டும் என்று சொல்லுங்கள்.
யாருமே பாடாத ஒரு பாடல், யாருமே உபயோகிக்காத ஒரு வார்த்தை என்று மக்களிடைய சிம்புவின் நற்பெயரைக் கெடுக்க சில விஷமிகள் பண்ணும் வேலை தான் இது.
சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்திருக்கிறார். அவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ட்ரெய்லரில், ஒரு பெண்ணிடம் போய் காண்டம் என்று விஷால் கேட்கிறார். இதெல்லாம் மக்களிடையே போய் சேராதா? அதைப் பார்த்துவிட்டு குழந்தைகள் காண்டம் என்றால் என்னப்பா என்று கேட்காதா?
ஒரு தமிழனான சிம்புவுக்கு ஆதரவாக ரசிகர்களாகிய நாங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று களமிறங்கி இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் நேற்று காலை வள்ளுவர் கோட்டம் அருகே சென்னை மாவட்ட தலைவர் குட்லக் சதீஷ் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். ‘அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அனைவரையும் கைது செய்வோம்’ என சிம்பு ரசிகர்களை போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து சிறிது நேரம் கோஷமிட்டுவிட்டு சிம்பு ரசிகர்கள் கலைந்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages