லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பச்சை நிறப் பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பச்சை நிறப் பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!

 

மதுரையில் நடைப்பெற்ற சித்திரைத் திருவிழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பச்சை நிறப் பட்டுடுத்தி கள்ளழகர் இன்று காலை ஆற்றில் இறங்கினார்.

 மதுரையில் சித்திரைத் திருவிழா வருடாவருடம் வெகு கோலாகலமாகத் துவங்கி திருக்கல்யாணம் உள்ளிட்ட பல வைபவங்களுடன் கடைசியாக கள்ளழகர் ஆற்றில் இறங்குவதில் முடியும். இந்த விழாவைக் காண மதுரையில் பல லட்சக் கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். சுந்தரவரதராஜ கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் நகரின் சுற்றுப்புற கிராமங்கள் வழியாக வைகை ஆற்றை இன்று காலை வந்தடைந்தார்.

பின்னர் பகதர்கள் புடை சூழ 9 மணி அளவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைப்பெற்றது. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டனர். அங்கு வேடமிட்டு வந்திருந்தவர்கள் பக்தர்கள் மீது நீரை அடித்து கொளுத்தும் வெயிலில் பக்தர்களைக் குளிர்வித்து மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages