விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைவார் என்கிற நம்பிக்கை உள்ளது.வைகோ
விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைவார் என்கிற நம்பிக்கை உள்ளது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அதன் தலைவர் விஜயகாந்தை, மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்கள் சந்தித்தனர்.சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, மக்கள் நலக் கூட்டணியின் கொள்கை நன்றாக இருக்கிறது என்று விஜயகாந்த் பாராட்டி இருந்தார்.எனவே, தங்களது கூட்டணியில் இணைய அழைப்பு
விடுக்கவே அவரைச் சந்தித்தோம் என்றும் வைகோ கூறியுள்ளார்.
விடுக்கவே அவரைச் சந்தித்தோம் என்றும் வைகோ கூறியுள்ளார்.
விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டனியில் இணைவார் என்கிற நம்பிக்கைத் தங்களுக்கு உள்ளது என்றும் கூறியுள்ள வைகோ, அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பீர்களா என்கிற கேள்விக்கு தெளிவான பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment