'பீப்' பாடலுக்கு நான்
இசையமைக்கவில்லை: அனிருத்
'பீப்' பாடலுக்குத் தான் இசையமைக்கவில்லை என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் தற்போது டொரண்டோவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். இந்த இசை நிகழ்ச்சிகளை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
அந்த ‘பீப்’ பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை. அதை எழுதவோ, பாடவோ இல்லை. தேவையில்லாமல் என் பெயர் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
நான் பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவன். இதுபோன்ற ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இந்த விளக்கத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் இருவரும் ஆபாசமாக பாடல் இயற்றியதாக மாதர் சங்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அனிருத் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
No comments:
Post a Comment