நடிகர் சங்கத்தில் குரு தட்சணை திட்டத்தைத் துவக்கி வைத்தார் நடிகர் சிவகுமார் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 28 December 2015

நடிகர் சங்கத்தில் குரு தட்சணை திட்டத்தைத் துவக்கி வைத்தார் நடிகர் சிவகுமார்

நடிகர் சங்கத்தில் குரு தட்சணை திட்டத்தைத் துவக்கி வைத்தார் நடிகர் சிவகுமார்

 தென்னிந்திய நடிகர் சங்கத்தில் குரு தட்சணை திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் நடிகர் சிவகுமார். 

நேற்று நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கூடியது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்த நடிகர் சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் இன்று குரு தட்சணைத் திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளனர். இதுக்குறித்து சிவகுமார் விளக்கம் அளிக்கையில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் நாங்கள் கேட்காமலே நடிகர் சங்கத்தில் இருக்கும் நலிவடைந்த கலைஞர்களின் குடும்பத்துக்கு உதவ நிதியுதவி அளிக்க வேண்டும் என்கிறத் திட்டம்தான் இது என்றார்.
நலிவடைந்த கலைஞர்களின் குடும்பத்தில் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு, பெரியவர்களின் மருத்துவச் செலவுக்கு என்று நிதி அளிப்பது என்று கூறினார்.இதை நடிகர் சங்கத்தத் துவக்கி வைத்த மூத்தவர்களுக்கு நாங்கள் செலுத்தும் நன்றிக் கடன் என்று நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages