பீப் பாடல்: அனிருத் & டி.ஆரின் முரண்பட்ட விளக்கங்கள்!
சிம்பு பாடிய பீப் பாடலின் இசையமைப்பாளர் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சிம்பு பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், சமூக வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்தது. இந்நிலையில் அந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைத்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இதை அனிருத் மறுத்துள்ளதால் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பீப் பாடல் தொடர்பாக அனிருத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பீப்’ பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை. அப்பாடலை நான் எழுதவோ, பாடவோ இல்லை. தேவையில்லாமல் என் பெயர் இந்தச் சர்ச்சையில் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். இதுபோன்ற ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இந்த விளக்கத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.
ஆனால் பீப் பாடல் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தபோது, அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் அனிருத் என்று குறிப்பிட்டிருந்தார். டி.ஆர். காவல்துறைக்கு அளித்த புகார் மனு:
அனிருத் மறுத்துள்ள நிலையில் டி.ஆர். இவ்வாறு கூறியிருப்பது மிகவும் குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. பீப் பாடல் தொடர்பாக அனிருத் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தால் பீப் பாடலின் இசையமைப்பாளர் தொடர்பாக சிம்பு விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment