பீப் சாங் சர்ச்சையில் சிம்புவுக்கு நேரில் ஆஜராக சம்மன் வரும் அளவுக்கு சிம்பு மாட்டிக்கொண்டுள்ளார், இதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கழன்றுக்கொள்ள முயற்சி செய்கிறார் அனிருத்.
கடந்த சில காலங்களாக சிம்புவுடன் நல்ல நட்பில் இருக்கும் அனிருத், சிம்புவுடன் சேர்ந்து பீப் சாங் இசையமைத்துக் கொடுத்தார் என்று நம்பும் அளவுக்கு இவர்களின் நட்பு நாடறிந்த ஒன்றாக இருந்தது. இந்நிலையில் கடந்த 12ம் திகதி அனிருத் இசையமைத்தார் என்றும், இதற்கு சிம்பு பாடல் எழுதி பாடினர் என்றும் ஒரு பாடல் வெளியானது. இந்த பாடலின் எதிரொலி இருவரையும் திகைக்க வைத்தது.எனவே, தங்களுக்குத் தெரியாமல் இந்த பாடல் இணையத்தில் வெளிவந்துவிட்டது என்று சமாதானம் சொன்னார்கள்.
இந்த பாடலில் பெண்களை ஆபாச வார்த்தைகளால் இழிவுப்படுத்தும் வரிகள் உள்ளன எனபதுதான் சர்ச்சை.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனநாயக மாதர் சங்கம் கோவை காவல் நிலையத்தில் சிம்பு மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்த பாடலுக்கு தாம் இசை அமைக்கவில்லை என்று அனிருத் கூறியுள்ளார்.இதற்கிடையில் கோவை காவல் நிலையம் சார்பில், சிம்புவின் இல்லத்துக்கு நேரில் சென்ற போலீசார் சிம்பு இதுக்குறித்து நேரில் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் கொடுத்துள்ளனர்.
இந்த சம்மனை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பெற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிய வருகிறது.பீப் சாங் என்பது படத்தில் கெட்ட வார்த்தைகள் வரும்போது வெறும் பீப் சப்தம் கொடுத்து மற்றவைகளை ஆஃப் செய்து வைப்பார்களே, அதுபோல பாடலில் கெட்ட வார்த்தை வரும்போது இசையை நிறுத்திவிட்டு வெறும் பீப் ஒலியை வைப்பது என்பதுக் குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment