நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத் குமார் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை:கார்த்தி
நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத் குமார் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை என்று சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைப்பெற்றது. ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்கள் நடிகர் சங்கத் தலைவர் நாசர் உட்பட நிர்வாகிகள் அனைவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய நடிகர் கார்த்தி, கடந்த இரண்டு வருடங்களுக்கான கணக்கு வழக்குகள் மற்றும் நடப்பு ஆண்டில் பாதியாண்டின் கணக்கு வழக்குகளை தருமாறு இரண்டுகடிதங்கள் எழுதியும் சரத் குமார் இன்னமும் தரவில்லை. ஆடிட்டர் ஊரில் இல்லை என்று சொல்லி வருகிறார்.
இன்னும் ஒரு வாரம் கழித்தும் கணக்கு வழக்குகளை சரத் குமார் ஒப்படைக்காத பட்சத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கார்த்தி மேலும் கூறியுள்ளார். விஷால் பேசுகையில், நடிகர் சங்க இடத்தில்
எஸ்.பி.ஐ நிறுவனத்துக்கு கட்டிடம் கட்ட போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக சரத் கூறியது பொய் என்றும், இப்போதுதான் முறைப்படி ரத்து செய்யப்பட்டது என்றும் விஷால் கூறியுள்ளார்.
மேலும், நடிகர் சிம்பு பாடியுள்ள பீப் சாங் விவகாரத்தில் நடிகர் சங்கம் உதவவில்லை என்று ராதிகா குறை கூறி உள்ளது அர்த்தமற்றது என்றும், சிம்பு பீப் சாங் விவகாரம் நீதி மன்றத்திலுள்ள நிலையில் நடிகர் சங்கம்
இதுக்குறித்து உதவி செய்ய முடியாது என்பதால், சிப்ம்புவிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்று விஷால் கூறியுள்ளார்.இதுக்குறித்து ராதிகாவுக்கு விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பாக நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது என்றும் விஷால் கூறியுள்ளார்.
நாசர் கூறுகையில் நடிகர் கமல்ஹாசன் சர்ச்சை விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிட வேண்டாம் என்று கமல்ஹாசனே கேட்டுக்கொண்டார் என்றும் இதையும் ராதிகா நடிகர் சங்கம் ஒதுங்கிக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment