புகைப்பிடிக்கத் தூண்டும் செல்களைக் கண்டறிந்துள்ளனர் பிரிட்டன் விஞ்ஞானிகள்
மனித உடலில் புகைப்பிடிக்க ஆவலைத் தூண்டும் செல்களைக் கண்டறிந்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் குழு மருத்துவ சஞ்சிகை இதழில் நேர்காணல் அளித்துள்ளது.
மனிதர்கள் புகைப்பிடிப்பதைத் தூண்டுவிக்கும் செல்களைக் கண்டறிய பல்வேறு தரப்பினரின் மரபணுக்கள் சோதனை மூலம் கண்டறிந்துள்ளனர் பிரிட்டன் விஞ்ஞானிகள் குழு என்று தெரிய வந்துள்ளது.50 ஆயிரம் பேரிடம் நேரடி மரபணு சோதனை மூலம், ஆய்வுக்குப் பயன்படுத்திய 2 கோடியே 80 லட்சம் மரபணுக்கள் மூலம் இந்த ஆய்வை கண்டறிந்துள்ளனர். மனிதர்கள் புகைப்பிடிக்கத் தூண்டும் செல்களைக் கண்டுப்பிடித்துள்ள இவர்கள் கூடவே மற்றும் இரு ஆராய்ச்சிக்களையும் வெளியிட்டுள்ளனர்.
அதாவது வருடக் கணக்கில் புகைப்பிடித்தாலும், அவர்களது நுரையீரல் நல்ல ஆரோக்கியமாக இருப்பது எதனால் என்பதையும், ஒரு நாள் கூடப் புகைப்பிடிக்காத ஒருவருன் நுரையீரல் எப்படி கெட்டுப் போகிறது என்பதற்கான காரணிகளையும் அவர்கள் கண்டறிந்து உள்ளதாக அவர்கள் பிரிட்டன் மருத்துவ சஞ்சிகை இதழில் குறிப்பிட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment