2016 இல் சினிமா : ஒரு முன் பார்வை! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 4 January 2016

2016 இல் சினிமா : ஒரு முன் பார்வை!

2016 இல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாலிவூட் & ஹாலிவூட் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இது. 

 ஹாலிவூட் திரைப்படங்கள் வரிசையில் :

Batman vs Superman - Dawn of Justice : மார்ச் 25ம் திகதி திரைக்கு வரவுள்ள இத்திரைப்படம் ஹாலிவூட் சூப்பர் ஹீரோஸ் திரைப்படங்களில் அதிகளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஹென்ரி கவில் சூப்பர் மேனாகவும், பென் அஃப்லெக் பேட்மேனாகவும் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் ஒருவர் மற்றையவருக்கு வில்லனாக இருப்பதே இத்திரைப்படம் பற்றிய விறுவிறுப்புக்கு காரணம். டெட்றோயிட், மிஷிகன், இலினாயிஸ், ஆபிரிக்கா மற்றும் தென் பசுபிக் நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் முதன்முறையாக இரு மிகப்பெரும் ஹாலிவூட் சூப்பர் ஹீரோக்களை ஒரே திரையில் ஒன்றாக இணைத்து மோதவிட்டு, ரசிகர்களின் வரவேற்பை பெறவும் போராடத் தொடங்கியுள்ளது.

Independence day Resurgence : ஜூன் 24ம் திகதி வெளிவரவுள்ள இத்திரைப்படம், Independence Day தொடர்ச்சியாக வரவுள்ளது. மீண்டும் பூமியைத் தாக்கவரும் அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட ஏலியன்களை பற்றி பேசவிருக்கிறது.

Captain America Civil War : மே 6ம் திகதி திரைக்கு வரவுள்ள இத்திரைப்படம் மார்வெலின் கேப்டன் அமெரிக்கா வரிசையில் புதிய பாகமாக வலம்வரவிருக்கிறது.

Kung Fu Panda 3 : ஜனவரி 29ம் திகதி திரைக்கு வரும் இத்திரைப்பம், சூப்பர்நேச்சுரல் வில்லன் காய் என்பனவை எப்படி குங்ஃபூ பண்டா எதிர்க்கிறது என்பதை பற்றிய கதை.

Finding Dory : Marlin, Nemo, Tang Gang, வரிசையில் புதிய அனிமேஷன் திரைப்படம், ஜூன் 17ம் திகதி திரைக்கு வருகிறது.

X-Men : Apocalypse : மே 27ம் திகதி திரைக்கு வருகிறது.

The Revenant : பேர்ட்மேன் புகழ் இயக்குனர் அல்ஜெண்றோ இனாரிட்டுவின் அடுத்த திரைப்படம். லியானோ டிகரியோ, டொம் ஹார்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் ஜனவரி 8ம் திகதி திரைக்கு வருகிறது.

The Legend of Tarzan : டார்சன் நாவலை மையமாக கொண்ட புதிய திரைப்படம். ஜுலை 1ம் திகதி வெளிவருகிறது.

Snowden : அமெரிக்க தொடர்பாடல் புலனாய்வு இரகசியங்களை வெளியுலகுக்கு கசியவிட்ட எட்வார்ட் ஸ்னொவ்டனைப் பற்றிய திரைப்படம். சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு வெளிவரும் Oliver Stone இன் புதிய திரைப்படம்.

இந்திய பாலிவூட் திரைப்படங்கள் வரிசையில் :

Fan : மனீஷ் ஷர்மாவின் புதிய திரைப்படம். ஷாருக்கான் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரத்தில், தானே சூப்பர்ஸ்டாராகவும் மற்றைய கதாபத்திரத்தில் தானே அவரது மிகப்பெரும் Fan ஆகவும் நடிக்கிறார்.

Ae Dil Hai Mushkil : ஐஷ்வர்யா ராய் பச்சன், ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம். கரன் ஜோஹர் இயக்குகிறார்.

Neerja : தீவ்ரவாதிகளால் 1986ம் ஆண்டு கடத்தப்பட்ட பான் அம் 73 எனும் பயணிகள் விமானத்தின் பணிப்பெண்ணானான நீரஜா, பயணிகளை காப்பாற்றும் தனது வீர முயற்சியின் போது சுடப்பட்டு உயிரிழந்தார். அவரைப் பற்றிய சுயசரிதை திரைப்படமாக வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தில் அக்கதாபாத்திரத்தில் சோனம் கபூர் நடிக்கிறார்.

 Raes : ஷாருக்கானின் மற்றுமொரு திரைப்படம். குடிபொருட்கள் விற்பன்ன தாதாவாக இத்திரைபப்டத்தில் களமிறங்கும் ஷாருக்கான், குஜராத்திய முஸ்லீமாக நடிக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages