சவுதி மன்னர் அதிரடி உத்தரவால் தொழிலாளர்கள் நிம்மதி! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 10 August 2016

சவுதி மன்னர் அதிரடி உத்தரவால் தொழிலாளர்கள் நிம்மதி!

வுதி அரேபியாவில், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கியை வழங்குமாறு அந்த நாட்டு மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பள  பாக்கியை வழங்குவதற்காக,  சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 100 மில்லியன் சவுதி ரியால் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவில், சில தனியார் நிறுவனங்களில் வேலை இழந்த தொழிலாளர்கள்,  அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். குறிப்பாக சவுதி ஓஜர் மற்றும் சவுதி பின்லேடன் கட்டுமான நிறுவனங்களில்  மட்டும் 2,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இது போன்ற சில நிறுவனங்களில் பணியாற்றிய இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த 16 ஆயிரம் தொழிலாளர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களும் உள்ளனர். இவர்கள் சம்பளத்தையும் பெற முடியாமல் தாய்நாடும் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இதையடுத்து, தொழிலாளர்களுக்கு  சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க சவுதி மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பள விவகாரத்தில்,  மன்னரே நேரடியாக தலையிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பளப் பாக்கியை வழங்க முன்வந்தன. ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் நிறுவனங்கள் தவித்தன. இதையடுத்து மன்னர் சல்மான், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க 100 மில்லியன் சவுதி ரியால்களை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு இந்தத் தொகை கடனாக வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்தத் தொகை நிறுவனங்களிடம் இருந்து திரும்ப வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சவுதியில் தவிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சவுதி ஏர்லைன்ஸ் மூலம் சொந்த நாடு அனுப்ப  நடவடிக்கை எடுக்குமாறும், விமானக் கட்டணத்தை அவர்கள் பணிபுரிந்த நிறுவனங்களிடம் வசூலிக்குமாறும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும் சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages