ஜெ., ஆட்சி முடிவுக்கு வர 3 மாதம் ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் ஆரூடம் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 16 October 2015

ஜெ., ஆட்சி முடிவுக்கு வர 3 மாதம் ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் ஆரூடம்

ராமேஸ்வரம்: தமிழக மக்கள் வேதனைபடும் ஜெ. ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 3 மாதம் தான் உள்ளது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் நடந்த பொது கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஹெலிகாப்டரில் பறக்கும் ஜெ., மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல் அடக்கத்திற்கும், பிறந்த தினத்திலும் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார். மாணவர்களுக்காக வாழ்ந்து வழிகாட்டிய கலாம் பிறந்த தினத்தை மாணவர் தினமாக மாநில அரசு அறிவிக்க வேண்டும். கடும் விலை வாசி உயர்வால்
தமிழக மக்கள் அவதிபடுகின்றனர். ஜெ., ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 3 மாதம் தான் உள்ளது. அதன் பிறகு, ஜெ., ஆட்சிக்கு வரமுடியாது.தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்கிறார்கள். பிறகு எதற்காக கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் வேண்டும் என பிரதமருக்கு ஜெ., கடிதம் எழுதுகிறார். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க மாநில அரசு போராடாமல், பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்.

இதே வேளையை தான் முன்பு திமுக செய்தது, மீன்களை தேடி செல்லும் மீனவர்களை சிறையில் அடைப்பது வேதனையாக உள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு தமிழக போலீஸ் வேண்டாம் என தலைமை நீதிபதி கவுல் கூறுகிறார். அந்தளவுக்கு மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. எங்களை குறை சொல்லும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் ஜெ., ஆட்சியை குறை சொல்லாமல் மவுனமாக உள்ளன. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்ததும் ஜெ.,வை அரசியலில் இருந்து விரட்டுவேன். அது என்னால் முடியும் என்றார்.

இதன் பின், 10, 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 12 மாணவர்களுக்கு தலா 2 கிராம் தங்க மெடல், 14 பேருக்கு இலவச சைக்கிள், 5 பேருக்கு லேப் டாப், 200க்கும் மேலான மாணவர்களுக்கு 'ஸ்கூல் பேக் 'விஜயகாந்த் வழங்கினார்.

பிரேமலதா பேச்சு: தமிழகத்தில் அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் மக்களை சீரழித்து விட்டனர். தமிழகத்தில் அரிசி, பருப்பு, உளுந்து, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வால் பெண்கள் குடும்பம் நடந்த முடியாமல் சிரமப்படுகின்றனர். பெண்கள் மன வேதனையை புரிந்து கொள்ள முடியாத, பெண் முதல்வர் ஆட்சி தமிழகத்திற்கு தேவையா?.

2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க., ஆட்சிக்கு வந்ததும் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும். நமக்கு நாமே திட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். அவரது நாடகம் மக்களிடம் எடுபடாது, 'அவர்கள் தமக்கு தாமே போடும் நாமம்' என்று தான் சொல்ல வேண்டும். 2016ம் ஆண்டில் மக்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ளும் அரசாக தே.மு.தி.க., ஆட்சி அமையும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages