ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலை குவிக்கும் ருத்ரமாதேவி - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 12 October 2015

ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலை குவிக்கும் ருத்ரமாதேவி


அனுஷ்கா மகாராணியாக நடித்துள்ள வரலாற்றுப் படமான ‘ருத்மாதேவி’ கடந்த 9–ந்தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆனது. தெலுங்கானா, ஆந்திரா பகுதியை ஆண்ட வீரமங்கையின் படம் என்பதால், அந்த மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இதில் நடிப்பதற்காக அனுஷ்கா வாள் பயிற்சி, குதிரை, யானை சவாரி பயிற்சி எடுத்தார். 2½ ஆண்டுகள் கஷ்டப்பட்டு நடித்ததாக கூறி இருந்தார். இப்போது தெலுங்கு மற்றும் ஒருசில மாநிலங்களில் வெளியாகி இருக்கும் ‘ருத்ரமாதேவி’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதைப்படி, பெண் குழந்தையாக பிறகும் ராஜகுமாரியை ஆண் என்று சொல்லி வளர்க்கிறார். ஒரு ஆண் மகன் கற்கும் அத்தனை வித்தைகளையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அவர் ஒரு ஆண் என்றே அனைவரும் நம்புகிறார்கள். திருமண வயது வந்ததும் திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. யார் மணப்பெண் என்பதும் உறுதி செய்யப்படுகிறது. அதன் பிறகு நடப்பது என்ன? பெண் விடுதலைக்காக ருத்ரமாதேவி செய்தது என்ன? என்பது மீதி கதை.

இந்த படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன என்றாலும், திரையிட்ட இடங்களில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

‘பாகுபலி’ இயக்குனர் ராஜமவுலியும் ‘ருத்ரமாதேவி’ படத்தை பாராட்டி இருக்கிறார். இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டும் ரிலீஸ் ஆன இடங்களின் மொத்த வசூல் ரூ.20 கோடி என்று தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து வசூல் மழை பொழிந்து வருவதாகவும் தெலுங்குபட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages