ம்ம்ம்...கிளப்புங்கள் என்று தமிழ் சினிமாவையே தன் சிரிப்பு சரவெடியால் ஆட்சி செய்த கலைஞன் வடிவேலு. மதுரையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவர்.
சினிமா மீது கொண்ட மோகத்தால் ஆரம்ப காலத்தில் மிகவும் சிறிய கதாபாத்திரத்தில் தலையைக்காட்டியவர் வடிவேலு, பின் ராஜ்கிரண் அவர்களின் உதவியால் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்தது.
வடிவேலும் தமிழ் சினிமா மெல்ல கவனிக்க, உலகநாயகன் பார்வை இவர் மீது விழ, தேவர் மகனில் மிக வலுவான கதாபாத்திரத்தை இவருக்கு கொடுத்தார். இப்படத்தில் காமெடி, குணச்சித்திரம் என இரண்டு கதாபாத்திரங்களிலும் இரட்டை சவாரி செய்தார்.
பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரமாக செய்தாலும், அவ்வபோது சூனா பானா போன்ற காமெடிகளில் கவர்ந்து இழுத்தார். இவையெல்லாம் விட வின்னர் படம் தான் வடிவேலுவிற்கு மைல் கல் என்று சொல்லலாம்.
இன்று சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் பல பேருக்கு பெயர் கொடுத்தது வடிவேலும் தான். ஆம்...சூனா பானா, ஸ்டைல் பாண்டி, வால்டர், கைப்புள்ள, பாடிசோடா என தங்கள் பெயர்களையே மறந்து வடிவேலுவாக வாழ்ந்து வருகிறார்கள்.
பலரும் கலாய்ப்பதற்கு முதலில் வடிவேலு புகைப்படங்களை தான் தேடுவார்கள், இவர் தற்போது சினிமாவில் நடிக்காமல் இருக்கலாம், ஆனால், மக்களின் கையில்(ஆன்ட்ராயிட் மொபைல்) இன்னும் இவர் தான் ஹீரோ.
இப்படி நம்மை காலம் கடந்து சிரித்து மகிழ்ச்சியில் ஆற்றி வரும் வடிவேலும், மீண்டும் சினிமாவில் பழைய வடிவேலுவாகவே நடித்து நம்மை ஈர்க்க வேண்டும் என இவரின் பிறந்தநாளான இன்று சினி உலகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
No comments:
Post a Comment