வெறுப்பு ஏற்படுத்தும் பருப்பு: தித்திக்குமா தீபாவளி? - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 16 October 2015

வெறுப்பு ஏற்படுத்தும் பருப்பு: தித்திக்குமா தீபாவளி?

சென்னை: தீபாவளி பட்சணங்கள் செய்வதற்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் பருப்பு வகைகளின் விலை, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஓராண்டில் கிலோவுக்கு ரூ.200 வரை அதிகரித்துள்ளது. கார, இனிப்பு வகைகளின் விலையும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இதனால் இந்த ஆண்டு தீபாவளி தித்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மொத்த விற்பனை சந்தையில் கடந்த ஆண்டு ரூ.90 ஆக இருந்த துவரம் பருப்பின் விலை தற்போது ரூ.190 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.85 ஆக இருந்த ஒரு கிலோ உளுத்தம் பருப்பின் விலை, தற்போது ரூ.160க்கு விற்கப்படுகிறது.

ஒழுங்கற்ற வானிலை, விளைச்சல் சரிவு, இடைத்தரகர்களின் தலையீடு, ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், இந்த விலை உயர்வு மக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. அத்துடன் இந்த விலைஉயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதால், மக்களிடம் அரசு மீது அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

தித்திக்குமா தீபாவளி: தீபாவளி பண்டிகையின் போது, சாதாரண மக்களின் வீடுகளில் கூட துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி வடை, பஜ்ஜி, போண்டா, இனிப்பு போண்டா, முறுக்கு போன்றவற்றை தயாரிப்பர்.

இனிப்பு வகைகளான மைசூர்பா, ஜிலேபி, லட்டு, பூந்தி போன்றவற்றுக்கும் பருப்பு மாவு அவசியம். பருப்பு வகைகளின் விலை உயர்வால் பதார்த்தங்களை தயாரிக்கவே மக்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடைகளில் இவற்றை வாங்கலாம் என்றால், அங்கும் கார, இனிப்பு வகைகளின் விலை எகிறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கார, இனிப்பு வகைகளின் பெயர்களை பேப்பர்களில் எழுதி பார்த்துக்கொள்ள வேண்டியது தான் போலிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages