'எந்திரன் 2' படப்பிடிப்பு துவக்கம்: அர்னால்ட் விலகல்? - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

demo-image

'எந்திரன் 2' படப்பிடிப்பு துவக்கம்: அர்னால்ட் விலகல்?

.com/blogger_img_proxy/

'எந்திரன்' படத்தில் ரஜினிகாந்த் | கோப்பு படம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'எந்திரன் 2' படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியிருக்கிறது. இப்படத்தில் இருந்து அர்னால்ட் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

'எந்திரன் 2' படத்துக்காக இயக்குநர் ஷங்கர் முழுவீச்சில் முதற்கட்ட பணிகளில் பணியாற்றி வந்தார். ரஜினி நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என கூறப்பட்டது. ரஜினியோடு நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உள்ள காட்சிகளுக்கான முன் வேலைகள் என பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இன்று முதல் EVP-யில் தயார் செய்யப்பட்டு இருக்கும் பிரம்மாண்டமான அரங்கில் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. காலை 9:30 மணியில் இருந்து 10:30 மணிக்குள் முதல் காட்சியை படமாக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

'எந்திரன் 2'வைப் பொறுத்தவரை ரஜினி, ஏமி ஜாக்சன் நடிப்பது மட்டுமே உறுதியாகி இருக்கிறது. வேறு யாரெல்லாம் ரஜினியோடு நடிக்கிறார்கள் என்பதை படக்குழு வெளியிடவில்லை.

படத்தில் எதிர்மறை பாத்திரத்துக்கு அர்னால்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் இப்படத்தில் இருந்து அர்னால்ட் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வேடத்தில் நடிக்க தற்போது ரித்திக் ரோஷனின் பெயர் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இன்று படப்பிடிப்பு துவங்கப்பட்டு இருப்பதால், விரைவில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று முறைப்படி அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages

Contact Form

Name

Email *

Message *