சிட்னி,
ஆஸ்திரேலியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக வீசிய சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கபட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமான அபூர்வ சுறாவளி வீசியது. அதனை தொடர்ந்து ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்தால் வீடுகள்,கார்கள் பலத்த சேதம் அடைந்துள்ளது.
ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் ஒரு கிரிக்கெட் பந்தின் அளவில் விழுந்ததால் மக்கள் பீதியுடன் சத்தமிட்டப்படி ஓடினர்.
சிட்னியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானமும் புறப்பட்டு செல்லும் விமான சேவையையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிட்னி நகரில் இன்று மணிக்கு 200 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாக அபூர்வ சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வீடுகள், கட்டிடங்களின் கூரைகள் பறந்தன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரின் பல இடங்களில் இருளில் மூழ்கி போய் உள்ளது.
No comments:
Post a Comment