ஏ.டி.ஜி.பி.,க்கு செம 'டோஸ்!' - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 16 December 2015

ஏ.டி.ஜி.பி.,க்கு செம 'டோஸ்!'

''இவங்களை எல்லாம் ஒழிச்சுக்கட்டணுமுங்க...'' என, கோபத்தோடு, கடைக்கு வந்தார் அந்தோணிசாமி.

''என்ன வே... இவ்வளவு கோவம்...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அரசு பாலிடெக்னிக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்ட, அரசு நிதி ஒதுக்கீடு பண்ணிச்சுங்க... சுற்றுச்சுவர் கட்டாமல், வேலை முடிஞ்சுருச்சுன்னு சொல்லி, கான்ட்ராக்டரும், ஆளுங்கட்சிக்காரங்களும் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிச்சுட்டாங்க...

''அதுல, மாவட்ட ஆளுங்கட்சி பிரமுகருக்கு, முக்கியப் பங்கு போயிருக்குங்க... 'சுற்றுச்சுவர் கட்டினால் தான், மின் இணைப்பு தர முடியுமுன்னு' என, மின்வாரிய அதிகாரிகள் சொன்னதால தான், விஷயம் வெளியே வந்துருக்குங்க...'' என விளக்கினார் அந்தோணிசாமி.

''சரியா தான் சொன்னீர்... அவாளை எல்லாம், ஒழிச்சு கட்டணும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''குவாரிகளை ஏலம் எடுக்க வந்த, ஆளுங்கட்சிகாரவ உறைஞ்சுட்டாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அண்ணாச்சி.

''விளக்கமா சொல்லு பா...'' என்றார் அன்வர்பாய்.

''சமீபத்தில் மதுரையில், 33 கல் குவாரிகளுக்கு ஏலம் நடந்துச்சு... கம்மியான தொகைக்கு ஏலம் எடுக்கலாமுன்னு நினைச்சு, ஆளுங்கட்சிகாரவ ஏகப்பட்ட பேர் வந்திருந்தாவ... ஆனா, குவாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை கேட்ட ஆளுங்கட்சிகாரவ எல்லாம், மிரண்டு போய், சும்மா இருந்துட்டாவ வே...

''கனிம வளத்துறை அதிகாரிங்க, 'மார்க்கெட் ரேட்'டை தான், குறைந்தபட்ச தொகையா குறிப்பிட்டு இருந்தாவ... மேலிடத்துல இருந்து, 'சிக்னல்' வரட்டுமுன்னு ஆளுங்கட்சிக்காரவ, ஏலம் எடுக்கலை... இதனால், 24 குவாரிகள் ஏலம் போகலை... ஏலம் போன, 9 குவாரிகளிலிருந்து மட்டுமே, 7.56 கோடி ரூபாய்க்கு மேல், அரசுக்கு வருவாய் கிடைச்சுருக்கு வே...'' என விவரித்தார் அண்ணாச்சி.

''குவாரி இருக்கற எல்லா மாவட்டங்களிலும், இப்படி குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கணுமுங்க,'' என்றார் அந்தோணிசாமி.

''ஏ.டி.ஜி.பி.,க்கு, செம, 'டோஸ்' விழுந்துருக்கு பா...'' என்றார் அன்வர்பாய்.

''என்ன காரணம் ஓய்...'' என, கேட்டார் குப்பண்ணா.

''போலீசாருக்கு கொடுக்கற, 'பெல்ட், ஷூ, ரெய்ன் கோட்' போன்ற சாமான்களை வைக்க, டி.ஜி.பி., ஆபிசுல, பெரிய அளவிலான, 'ஸ்டோர் ரூம்'கள் இருக்கு... அதுல, மூணு வருஷத்துக்கு மேலாக, மங்களகரமான, ஏ.டி.ஜி.பி., ஒருத்தரு, தன்னோட வீட்டில் பயன்படுத்திய பழைய சேர், கட்டில், மெத்தை, பீரோவை எல்லாம் போட்டு வச்சிருந்தாரு பா...
''அதிகாரிகள் இன்ஸ்பெக் ஷன் போனப்ப தான், விசயம் வெளிய வந்திருக்கு... உயரதிகாரிகளுக்கு விசயம் போனதால, அந்த, ஏ.டி.ஜி.பி.,க்கு செம டோஸ் விழுந்துருக்கு... உடனே, எல்லாத்தையும் காலி பண்ணனுமுன்னு உத்தரவு போட்டுருக்காங்க பா...

''விழுப்புரத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர், அந்த சாமான்களை எல்லாம், லாரியில ஏத்திட்டு, ஏ.டி.ஜி.பி., வீட்டுல போய் இறக்கிருக்காரு... அவரு ஏன், இதை செஞ்சாருன்னு, விசாரணை நடக்குது பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.நண்பர்கள் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages