மழை பாதிப்பை குறைத்து மதிப்பிட உத்தரவு: விஏஓக்கள் திடீர் போராட்டம் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

மழை பாதிப்பை குறைத்து மதிப்பிட உத்தரவு: விஏஓக்கள் திடீர் போராட்டம்

வானூர்: மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுமாறு கூறியதால், வானூர் தாசில்தாரை கண்டித்து விஏஓக்கள்  பணியை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் 81 வருவாய் கிராமங்கள் உள்ளது. இந்த  பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழையால் குடிசை வீடுகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் சேதமடைந்தோருக்கு  தமிழக அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டு உள்ளது.


அதன்படி விஏஓக்கள் மூலம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 கட்டமாக நிவாரண உதவி  வழங்கப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் வானூர் தாலுகாவில் 41 கிராமங்கள் மட்டுமே  மழையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த கிராமங்களில் மட்டும் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளுமாறு தாசில்தார் காமாசிங் உத்தரவிட்டு  உள்ளார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள விஏஓக்கள், 81 கிராமங்களும் மழையால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட கிராமங்களை கணக்கெடுத்தால்  மற்ற கிராம மக்கள் பிரச்னை செய்வார்கள் என குற்றம் சாட்டி, நேற்று பணியை புறக்கணித்து வானூர் தாசில்தார் குடியிருப்பில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages