2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்தவீடு: மோடி - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்தவீடு: மோடி

வருகிற 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்தவீடு என்பதே தமது கனவு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நேற்று கேரளாவின் திருச்சூர் பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது தாம் முன்னதாகவே கேரளாவுக்கு வந்திருக்க வேண்டும், பல்வேறு காரணங்களால் வர முடியாமல் போனது என்று குறிப்பிட்டார். கேரளாவில் பாஜக மாற்று சக்தியாக இருக்கும் என்கிற நம்பிக்கை தமக்கு உள்ளதாக மோடி கூறியுள்ளார்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணிக்கு மாற்றாக விளங்கும் பாஜக அடுத்த ஆண்டு நடைப்பெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறியுள்ளதோடு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணிக் கட்சிகள் கேரள மாநிலத்தின் வளர்ச்சிக் குறித்து திட்டமிட்டதில்லை என்கிற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். மேலும், 2022ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்பதே தமது கனவு என்றும் அந்த கனவை நிஐமாக்கும் முயற்சியில் பஜக அரசு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages