டுவிட்டரில் எபோலா வியக்கவைக்கும் தரவுகள் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

டுவிட்டரில் எபோலா வியக்கவைக்கும் தரவுகள்

உலகைத் தற்போது அச்சுறுத்தி வரும் எபோலா என்ற ஆட்கொல்லித் தொற்று நோய் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் பத்திரிகைத் தலையங்கங்களையும் இணையத்தையும் ஆக்கிரமித்து வருகின்றன.

முக்கியமாக டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் இவ்விவகாரம் மிகவும் சூடு பிடித்துள்ளது. உலகம் முழுதும் சுமார் 170 நாடுகளைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 16 இலிருந்து ஆக்டோபர் 6 வரை டுவிட்டரில் எபோலா குறித்து பதிந்த டுவீட்டுக்களின் எண்ணிக்கை 10.5 மில்லியன் ஆகும்.


ஆக்டோபர் ஆரம்பத்தில் எபோலா டுவீட்டுக்கள் எவ்வாறு வேகமாகப் பரவின எனக் காட்டும் தகவல்களை டுவிட்டரிடம் இருந்து பெற்று டைம் ஊடகம் வெளியிட்ட அனிமேஷன் வரைபடம் கீழே:


உலகில் அதிகளவு பேர் அதாவது 2000 இற்கும் அதிகமானவர்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடான லிபேரியாவிலேயே எபோலாத் தாக்கத்துக்குப் பலியாகியுள்ளனர். இருந்த போதும் உலகில் அதிகளவு எபோலா டுவீட்டுக்களை இதுவரை அமெரிக்காவே வெளியிட்டுள்ளது. உச்சக்கட்டமாக செப்டம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவின் முதல் எபோலா நோயாளி டல்லாஸ் மாகாணத்தில் பலியானதை அடுத்து அமெரிக்காவில் எபோலா பயம் அதிகரித்திருந்தது. இதை அடுத்து அடுத்த நாளான ஆக்டோபர் 1 ஆம் திகதி டுவிட்டரில் எபோலா குறித்த டுவீட்டுக்கள் நிமிடத்துக்கு 6000 என்ற வேகத்தில் காட்டுத் தீ போல் பரவியிருந்தன.


டுவீட்டரில் எபோலா தொற்று குறித்த வதந்திகள் அதிகமாகப் பரவுவது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ள அதேவேளை எபோலா குறித்து சமூக வலைத் தளங்களில் இதுவரை வெளியான தகவல் பரிமாற்றங்கள் பல உதவிகரமாகவே இருந்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages