பீப் பாடல்: சிம்பு, அனிருத்துக்கு எதிராக மேலும் 2 வழக்கு
சர்ச்சைக்குரிய பாடல் விவகாரத்தில், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது மேலும் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
சென்னை சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றத்தில், பத்திரிகையாளர் பிஸ்மி என்பவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரும் தனித் தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் சிம்பு, அனிருத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணையை, வரும் 28-ம் தேதிக்கு நீதிபதி பிரியா ஒத்திவைத்தார்.
இதேபோல், கடந்த வெள்ளிக் கிழமையன்று தென்சென்னை மாவட்ட வழக்கறிஞர்கள் அணி சார்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையும், வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.பெண்களை கேவலாகச் சித்தரித்து, 'பீப்' பாடல் எழுதி பாடிய நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment