டெல்லியில் எல்லைப் பாதுகாப்பு படை விமானம் விபத்துக்குள்ளானது: 4பேர் உயிரிழப்பு
எல்லைப் பாதுகாப்பு படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் டெல்லி அருகே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 4 பேர் உயிரிழந்ததாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ஏர்கிராஃப்ட் எனப்படும் சிறிய ரக விமானம் டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு புறப்பட்டுச் சென்றது. 10 முதல் 12 பேர் வரை சென்றதாக கூறப்படும் இந்த விமானம், டெல்லி அருகேயுள்ள துவாரகா பகுதியில் சென்ற போது விபத்துக்குள்ளானது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின்மீது மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment