நீங்கள் தனிநபராக ஆபத்தை எதிர்கொண்டால் தானாகவே போலிசுக்கு விரைந்து தகவல் அளிக்கும் மாபைல் App அறிமுகம் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

நீங்கள் தனிநபராக ஆபத்தை எதிர்கொண்டால் தானாகவே போலிசுக்கு விரைந்து தகவல் அளிக்கும் மாபைல் App அறிமுகம்

 

Safe Trek என்ற நிறுவனம் அண்மையில் அறிமுகப் படுத்தியுள்ள மாபைல் App ஆனது தனி நபராக நீங்கள் எங்கேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் உங்களது இடத்தை உடனே விரைந்து தானாகவே போலிசுக்குத் தெரியப் படுத்தும் வசதியைக் கொண்டதாக இருக்கின்றது.

குறிப்பாக இந்த App இனை தமது ஸ்மார்ட் பேசியில் நிறுவியுள்ள பெண்கள் இரவில் தமது வீட்டுக்குத் தனியாகத் திரும்பிக் கொண்டிருக்கும் போது தாம் ஆபத்தாக இருப்பதாக உணர்ந்தால் தாம் பாதுகாப்பாக உணரும் வரை தமது ஸ்மார்ட் தொலைபேசியின் டச் ஸ்க்ரீனை விட்டுத் தமது விரலை அகற்றாது வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் தமது விரலை எடுத்து விட்டால் குறித்த App இனை இடைநிறுத்த ஓர் pin நம்பரை உட்செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அல்லது உண்மையிலேயே ஆபத்தை எதிர்கொண்டால் குறித்த Safe Trek இன் App ஆனது தானியங்கி முறையில் போலிசாருக்குத் தகவல் அளித்து நீங்கள் இருக்கும் இடம் குறித்த GPS வழிகாட்டுதலையும் தெரிவித்து விடும். ஒரு மாதத்துக்கு சுமார் $3 டாலர்கள் கட்டணம் வசூலிக்கும் Safe Trek இனது இந்த App சேவை தற்போது அமெரிக்காவில் மட்டுமே பாவனைக்கு வந்துள்ளதுடன் இதுவரை 250 000 இற்கும் அதிகமான பாவனையாளர்கள் இதில் பதிவு செய்தும் உள்ளனர். இது வெறுமனே GPS மாத்திரமன்றி வேறு வரைபட தொழிநுட்பங்களையும் பயன்படுத்தக் கூடியது. இந்தத் தொழிநுட்பமானது பிரச்சினையில் மாட்டிக் கொள்ளக் கூடிய நபர் கூச்சலிட்டு உதவிக்கு அழைக்கவோ அல்லது தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவோ தருணம் கிடைக்காத பட்சத்திலும் தானியங்கி முறையில் அவருக்குச் சில நிமிடங்களில் பாதுகாப்பை வரவழைக்கக் கூடியது என்பதால் தற்போது பிரசித்தமாகி வருகின்றது.

அமெரிக்காவின் மிஸ்ஸௌரி பல்கலைக் கழக மாணவர் குழு ஒன்றால் இந்த App கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. மேலும் இதில் இதுவரை பதிவு செய்யப் பட்ட வாடிக்கையாளர்களில் 70% வீதமானவர்கள் 13 இற்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன் 95% வீதமானவர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages