தம்மை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட நளினி மனுத் தொடுத்து உள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினிக்கு, கடந்த பல வருடங்களுக்கு முன்பே தூக்குத் தண்டனையை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 20ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்து வருகிறது என்றும், 24 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தம்மையும் மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பாக ஒரு மனுத் தாக்கலானது.
விசாரணைக்கு வந்த நிலையில், நளினியை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று நளினியின் வழக்கறிஞர் வாதாடினார். இதையடுத்து தமிழக அரசு மனுதாரரின் மனுவுக்கு இரண்டு வார கால அவகாசத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment