உலகின் மிகக் குண்டான மனிதரான ஆன்ட்ரெஸ் மொரெனோ மரணம்! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 28 December 2015

உலகின் மிகக் குண்டான மனிதரான ஆன்ட்ரெஸ் மொரெனோ மரணம்!

உலகின் மிகக் குண்டான மனிதராக கருதப்பட்ட மெக்ஸிக்கோவின் ஆன்ட்ரெஸ் மொரெனோ (வயது 38), நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டு 2 மாதங்களே ஆன நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். 

ஆன்ட்ரெஸ் மொரெனோ, 450 கிலோ கிராம் எடை கொண்டவர். அவர், பெரிய தொப்பையுடன் சிரமப்பட்டதால், தான் பார்த்து வந்த பொலிஸ் வேலையை இராஜினாமா செய்ய வேண்டியேற்பட்டது.

எனவே, அறுவை சிகிச்சை செய்து, தனது உடல் எடையை குறைக்க மொரெனோ முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி ஜலிஸ்கோ மாநிலம் குடலஜராவில் உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதில், அவரது வயிற்றுப் பகுதியை 4இல் 3 பங்கை அறுவை சிகிச்சை செய்து, அதிகம் உண்ணாதபடி மருத்துவர்கள் எடை குறைப்பு செய்தனர். இதன் மூலம் சுமார் 100 கிலோ எடை குறைந்தார். நவம்பரில் மற்றும் ஒரு அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது. இதையடுத்து, சற்று உடல் மெலிந்த அவர், இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்தினம், மூச்சு விட சிரமப்பட்ட மொரெனோவை, மீட்புப் படையினர் உதவியுடன் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages