சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி: செர்பிய வீரர் டிப்செராவிச் பங்கேற்பது உறுதி
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதை செர்பிய வீரர் JANKO TIPSERAVIC உறுதிசெய்துள்ளார்.
டிப்செரவிக் கலந்து கொள்வதை அடுத்து, சர்வதேச தரநிலையில் முதல் 50 இடங்களுக்குள் உள்ள 10 வீரர்கள் சென்னை ஓபனில் கலந்து கொள்கின்றனர். 2013-ஆம் ஆண்டு சென்னை ஓபனில் டிப்செரவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
2012-ஆம் ஆண்டு லியாண்டர் பயஸ்-சுடன் இணைந்து இரட்டையர் பிரிவிலும் டிப்செராவிச் சாம்பியன் பட்டம் வென்றார். வாவ்ரிங்கா, கெவின் ஆண்டர்சன், BENOIT PAIRE, ROBERO BAUTISTA AGUT, GUILLERMO LOPEZ, GILLES MULLER, VASEK POSPISIL உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஜனவரி நான்காம் தேதி தொடங்கி பத்தாம் தேதி வரை நுங்கம்பாக்கம் SDAT விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது
.
.
No comments:
Post a Comment