கல்வி எனும் பணம் காய்க்கும் மரம்! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 15 December 2015

கல்வி எனும் பணம் காய்க்கும் மரம்!

கல்வி எனும் பணம் காய்க்கும் மரம்!

 

‘‘புள்ளைங்க கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்குதுன்னு சொன்னாலே, சொந்தக்காரங்கள்லாம் பதறிப் போய் துக்கம் விசாரிக்கறாங்க. அந்த லட்சணத்துல இருக்குது அரசுப்பள்ளிகள். வாத்தியார் இல்லே... கட்டிட வசதி இல்லே... மரத்தடியில பாடம் நடத்துறாங்க. இருக்கிற வாத்தியாருங்களும் துணைத்தொழில் மாதிரி ஸ்கூலுக்கு வந்து போறாங்க.

கணக்கெடுக்கிறதுல இருந்து எலெக்‌ஷன் நடத்தறவரைக்கும் எல்லாத்துக்கும் வாத்தியாருங்கதான்... அப்புறம் எப்படி புள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்கமுடியும்? தனியார் பள்ளியிலதான் சேத்தாகணும்... ஆனா சம்பாத்தியத்துல முக்கால்வாசி, புள்ளைங்க படிப்புக்கே போயிடுது...’’ - ஆதங்கமும் ஆவேசமுமாகப் பேசுகிற மாலதி தஞ்சாவூரைச் சேர்ந்தவர்.

பேராவூரணி நீலாவுக்கு 2 பிள்ளைகள். பையன் +2. பெண் 9ம் வகுப்பு. இருவருமே தனியார் பள்ளியில்தான் படிக்கிறார்கள். ‘‘அரசுப் பள்ளியில சில பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. +2வைப் பொறுத்தவரை கால் மதிப்பெண்ல கூட வாய்ப்பு பறி போகலாம்.
 

முக்கியமான பாடங்களுக்கு வாத்தியாருங்க இல்லேன்னா எப்படி புள்ளைங்க படிச்சு மார்க் வாங்குவாங்க? உக்காரக்கூட நல்ல பெஞ்ச் இல்லே. அதனாலதான் தனியார் பள்ளியை நாடிப் போறாங்க. அரசுப்பள்ளிகளை சரியாப் பராமரிக்காத அரசு, தனியார் பள்ளிகளோட கட்டணத்தையும் சரிவர முறைப்படுத்துறதில்லை. அதனால பிள்ளைகளோட படிப்பு மிகப்பெரிய சுமையா மாறிடுச்சு...’’ - வருந்துகிறார் நீலா.

மாலதி, நீலாவின் குரல்கள் தமிழகத் தாய்மார்களின் ஒட்டுமொத்தக் குரலாக எதிரொலிக்கின்றன. ஒரு காலத்தில் பிள்ளைகளின் திருமணம்தான் பெற்றோருக்கு சுமையாக இருந்தது. இன்று அதைவிடவும் பெரிதாகியிருக்கிறது கல்வி. ‘அரசுப்பள்ளிகள், இல்லாதவர் வீட்டுப் பிள்ளைகளுக்கானவை; தனியார் பள்ளிகளில் படித்தால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும்’ என்ற மாயை பெற்றோர்களிடம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது.

பிள்ளைகளின் எதிர்காலம் மீதான அக்கறையில், தகுதியை மீறி கடன்பட்டு தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் பெற்றோர். சூழலை சரியாகப் பயன்படுத்தி கல்வியை பணம் காய்ச்சி மரமாக மாற்றிவிட்டன தனியார் பள்ளிகள். பல அறிவாளித் தலைமுறைகளை உருவாக்கிய அரசுப்பள்ளிகள் மெல்லத் தேய்ந்து அழிந்து கொண்டிருக்கின்றன. இன்னொருபக்கம், ‘இணைப்பு’ என்ற பெயரில் பள்ளிகளை மூடிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.

தமிழகத்தில் அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 70 லட்சம் மாணவர்கள் அரசுக் கல்விக்கூடங்களையே நம்பியிருக்கிறார்கள். சுமார் 16% மாணவர்கள் 5ம் வகுப்பு முடிப்பதற்குள்ளாகவே பள்ளியிலிருந்து நின்று விடுகிறார்கள். +2 முடிப்பதற்கு முன்பாக 50% பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். +2 முடித்த மாணவர்களில் 34% பேர் மட்டுமே உயர்கல்வியை எட்டிப் பிடிக்கிறார்கள். இதெல்லாம் அரசு தருகிற புள்ளிவிவரங்கள்.

அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, போதிய ஆசிரியர்களை நியமித்து, இடைநிற்கும் மாணவர்களை ஈர்த்து, வாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவது அரசின் கடமை. ஆனால் தமிழக அரசு தன் கடமையில் இருந்து விலகி, தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறது. உரிய கண்காணிப்பும், போதிய நிதி ஒதுக்கீடும் இல்லாமல் அரசுப்பள்ளிகள் பொலிவிழந்து கொண்டிருக்கின்றன.

மதிப்பெண் கல்விமுறையில் தங்கள் பிள்ளைகள் பின்தங்கிவிடக்கூடாது என்ற பதைபதைப்பில் பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து, அவற்றை முறைப்படுத்த வேண்டிய அரசு, நன்றாகப் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களை தன் செலவிலேயே தனியார் பள்ளிகளில் சேர்த்து தன் இயலாமையை வெளிப்படுத்துகிறது.

‘‘இங்கு கல்வித்தந்தையாக இருப்பவர்களில் 80% பேர் அரசியல்வாதிகள். அரசின் கொள்கை முடிவுகளுக்குப் பின்னால் அவர்கள்தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உதவியாளர், காவலர் உள்பட பல பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இதனால், கற்றல்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கிராமத்துக் குழந்தைகள் வாகனத்தில் பயணித்து அருகாமை நகர தனியார் பள்ளிகளில் படிக்கின்றன. கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகள் காற்றாடுகின்றன. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் உள்ளன.
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages