பீப் பாடலுக்கு எதிரான வழக்கு: சிம்பு ஆஜராகும் தேதியை மாற்ற போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
பீப் பாடல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக சிம்பு ஆஜராகும் தேதியை ஜனவரி 5-க்கு மாற்ற கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸாரை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
பீப் பாடல் குறித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின்பேரில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவர் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில், சென்னையிலும் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
இதற்கிடையே, இருவரும் ஜனவரி 2-இல் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்குகளில் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன், சிம்பு ஆஜராகும் தேதியை ஜனவரி 5-க்கு மாற்ற வேண்டும் என்றும் விசாரணையை 4-க்கும் ஒத்திவைத்தார்.

No comments:
Post a Comment