சென்னை சாலைகளில் வெள்ளப்பெருக்கு: இயல்பு வாழ்க்கை முடக்கம்
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிண்டி, கோயம்பேடு, அடையாறு, அண்ணாசாலை, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, பல்லாவரம், விருகம்பாக்கம், தாம்பரம், அம்பத்தூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சாலைகளில் குளம்போல் தேங்கியுள்ளது.
இதனால், வாகனங்கள் நீரில் நீந்திச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் செல்ல முடியாததால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய கைலாஷ் உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளங்களின் காரணமாகவும், மழை நீர் தேங்கியுள்ளதால் நகரின் மற்ற இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையினால், சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் தரையிரங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனையில் மழை நீர் தேங்கியுள்ளதால், நோயாளிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இடைவிடாது பெய்துவரும் கனமழையால் சென்னை நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது
.
.
No comments:
Post a Comment