நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடி உள்ளது - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 28 December 2015

நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடி உள்ளது

நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடி உள்ளது

 

நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று சங்கத் தலைவர் நாசர் தலைமையில் கூடி உள்ளது.
நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க என்று இன்று கூடி உள்ளது. கூட்டத்தில் விஷால், கார்த்தி, கருணாஸ் என்று முக்கியமானவர்களும், சரத் குமார் அணியில் வெற்றிப் பெற்றவர்களும் கலந்துக்கொண்டு உள்ளனர்.
கூட்டத்தில் நடிகர் சிம்புவின் பீப் சாங் விவகாரம், நடிகர் சங்கத்துக்குப் புதுக்கட்டிடம் கட்டுவது, நலிந்த கலைஞர்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தித் தர நிதி ஆதாரங்களைத் திரட்டுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிபார்கள் என்று தெரிய வருகிறது.
நடிகர் சிம்பு தாமே அந்த பாடலை இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் தெரிவித்திருந்த நிலையில், அந்த பாடலை யார் பதிவேற்றம் செய்தது என்பதில் யூ டியூப் நிறுவனம் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages