ஜனவரி முதலாம் திகதி முதல் மீனவர்கள் தற்பாதுகாப்பு அங்கி அணிவது கட்டாயம்! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 23 December 2015

ஜனவரி முதலாம் திகதி முதல் மீனவர்கள் தற்பாதுகாப்பு அங்கி அணிவது கட்டாயம்!

ஜனவரி முதலாம் திகதி முதல் மீனவர்கள் தற்பாதுகாப்பு அங்கி அணிவது கட்டாயம்!


                               

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மீனவர்கள் தற்பாதுகாப்பு அங்கி அணித்து தொழிலுக்கு செல்வதை காட்டாயமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
இதனை மீறிச் செல்லும் படகுகளுக்கு மீ்ன்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தற்பாதுகாப்பு அங்கி மற்றும் ஐரோப்பிய மீன்பிடிக்க தடை என்பன குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, “சட்டங்களை இறுக்கமாக்கி மீனவர்களுக்கு இடையூறு செய்வதற்கு நாம் தயாரில்லை. ஆனால், மீனவர்களின் பாதுகாப்பிற்கு தற்பாதுகாப்பு அங்கிகள் அவசியமானவை. எனவே, மீன்பிடிக்கச் செய்கையில் பாதுகாப்பு அங்கிகள் அணியாத போதும் அவற்றை படகுகளில் கட்டாயம் எடுத்துச் செல்ல வேணடும். இது குறித்து ஜனவரி முதல் கண்காணிக்கப்படும்.
அத்தோடு, 2016 தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் ஐரோப்பிய மீன்பிடி தடை தொடர்பில் சாதகமான நற்செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மீன்பிடி தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள பரி்ந்துரைகள் தவறானவையல்ல, படகு கண்காணிப்பு உபகரணங்களை பொருத்தி வருகிறோம் ஏனைய பரிந்துரைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சர்வதேச கடலில் 1615 படகுகளை ஈடுபடுத்த எமது நாட்டிற்கு அனுமதியுள்ளது. இதுவரை 1550 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய படகுகளை ஈடுபடுத்த வெளிநாட்டு கம்பனிகளுக்கும் அவகாசம் வழங்கப்படும். உள்ளூர் மீனவர்களுக்கு பாரிய படகுகள் கொள்வனவு செய்ய கடனுதவி வழங்கப்படும்.” என்றுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages