சீனாவில் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி!
சீனாவில் ஒவ்வொரு குடும்பத்தினரும் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.
உலகிலேயே அதிக சனத்தொகை கொண்ட நாடான சீனாவில், சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு குடும்பத்தினர் ஒரு குழந்தை மாத்திரமே பெற்றுக் கொள்ளும் வகையிலான சட்டமொன்று நடைமுறையில் இருந்தது.
இதனால், மக்கள் தொகை கட்டுக்குள் இருந்தாலும், மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, வேலைக்கு ஆள் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது.
சீனாவில், 2030ஆம் ஆண்டில் 65 வயதை கடந்தவர்கள், 18 சதவீதம் பேராக இருப்பர் என்றும், 2050ஆம் ஆண்டில் 60 வயதை கடந்தோர், சீன மக்கள் தொகையில், 50 கோடி பேராக இருப்பர் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, 2013ஆம் ஆண்டு தம்பதியரில் ஒருவர், தங்கள் வீட்டிற்கு ஒரே குழந்தையாக இருந்தால், அத்தம்பதியர், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள சீன அரசு அனுமதி அளித்தது.
இதன் தொடர்ச்சியாக, அனைத்து தம்பதியரும், இரு குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் வகையில், குடும்பக் கட்டுப்பாடு கொள்கை திட்டத்தில் மாற்றம் செய்ய சீனா முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment