சிம்புவின் பீப் பாடல் குறித்து நடிகை சினேகா கருத்து!
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சினேகா, சிம்புவின் பீப் பாடல் பற்றி கூறியதாவது:
பெண்களை வர்ணிக்கிற பாடலும் உண்டு, அடிடா உதைடா என்று சொல்கிற பாடலும் உண்டு. ஒன்றும் செய்யமுடியாது. ஒரு பாடலைப் பேசிப் பேசித்தான் ஹிட் ஆக்குகிறோம். இதனால்தான் எல்லோரும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். பீப் பாடலை நிஜமாகவே நான் கேட்கவில்லை. கேள்வி கேட்டதால், அதில் அப்படி என்ன உள்ளது என்று அப்பாடலைக் கேட்கத் தூண்டியுள்ளீர்கள். இதுதான் ஒரு பாடலை ஹிட் ஆக்குகிறது என்றார்.
No comments:
Post a Comment