புதுவையில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 21 December 2015

புதுவையில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை

2 பேருக்கு நடந்த ஆபரேஷன் வெற்றி


புதுவையில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை



                              

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஏழை, எளிய மக்களின் வசதிக்காக அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதுவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே இதய அறுவை சிகிச்சைகள் வசதிகளை இங்கேயே துவங்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். புதுச்சேரி சுகாதாரத்துறை, சென்னை பிரண்டியர் லைப் லைன் மருத்துவமனையுடன் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள புதுவை அரசு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 
கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி வாரத்தில் 3 நாட்களுக்கு 5 அறுவை சிகிச்சைகள் அரசு பொது மருத்துவமனையில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னை தனியார் மருத்துவமனை டாக்டர் செரியன் தலைமையில் 25 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், நேற்று காலை புதுவை வந்தனர். அவர்களை புதுவை அரசு பொது மருத்துவமனை இதயவியல்துறை தலைவர் டாக்டர் மணிமாறன் தலைமையிலான டாக்டர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து புதுவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மாணிக்கம் என்ற நோயாளிக்கு பைபாஸ் ஆபரேஷன், 55 வயது பெண்மணிக்கு இதயத்தில் இருந்த ஓட்டையும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. சென்னை குழுவினருடன், புதுவை அரசு மருத்துவர்கள் 30 பேர் கொண்ட குழுவினரும் ஆபரேஷன்களை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதுகுறித்து இதயவியல் துறை தலைவர் டாக்டர் மணிமாறன் கூறுகையில், கடந்த காலங்களில் புதுவை நோயாளிகள் வெளி மாநிலங்களுக்கு சென்று சிகிச்சைபெற வேண்டிய சூழல் இருந்தது. இதனால் ஏழைமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து புதுவை அரசு மற்றும் பிரண்டியர் மருத்துவமனை இணைந்து செய்த ஒப்பந்தப்படி 2 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 5 பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இத்தகைய அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாகும். இதய ஓட்டையை அடைக்க ரூ.1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை ஆகும். வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள புதுவையை சேர்ந்த நோயாளிகளுக்கு இந்த ஆபரேஷன் அரசால் இலவசமாக செய்யப்படுகிறது. ஏற்கனவே புதுவை அரசு பொதுமருத்துவமனையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது பெரிய அளவிலான இதய அறுவை சிசிக்சைகளையும் மேற்கொள்ள முடியும். இதன்மூலம் புதுவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை தொடர்பான பயிற்சியும் கிடைக்கும். எதிர்காலத்தில் நமது மருத்துவர்களே இதய அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு தகுதியை பெற முடியும், என்றார். பேட்டியின் போது மருத்துவ கண்காணிப்பாளர் மோகன் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages