என் படவாய்ப்புகளைத் தடுத்த பிரபல ஹீரோ: நடிகை பாவனா குற்றச்சாட்டு!
என் தோழிக்கு உதவப்போய் அதனால் பிரபல நடிகர் ஒருவர் என் பட வாய்ப்புகளைத் தடுத்தார் என்று நடிகை பாவனா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழிலும் மலையாளப் படங்களிலும் நடித்து வரும் பாவனா, முன்பு போல அதிகப் படங்கள் நடிப்பதில்லை. திடீரென அவருக்குப் படவாய்ப்புகள் குறைந்தது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
என் தோழி ஒருவர் குடும்பப் பிரச்னையால் அவதிப்பட்டார். இதனால் என்னிடம் அவர் உதவி கேட்டார். நானும் என்னாலான உதவிகளை அவருக்குச் செய்தேன். அவருடைய கடினமான காலகட்டங்களிலும் உடன் இருந்தேன். ஆனால் இதன்மூலமாக என் வாழ்க்கையிலும் பிரச்னை ஏற்பட்டது. அதன்பிறகு மலையாளப் பட வாய்ப்புகள் குறைந்து போயின. சமீபத்தில் வெளியான சில மலையாளப் படங்களில் நான் முதலில் ஒப்பந்தமாகி கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்டேன். நீண்டநாள் கழித்துதான் இதற்கெல்லாம் பிரபல நடிகர் ஒருவர்தான் காரணம் எனத் தெரிந்தது. அந்த நடிகருக்கு நான் நன்றி சொல்லவேண்டும். அவர் தடுத்த படங்கள் எல்லாம் வெற்றி பெறவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.
No comments:
Post a Comment