வருங்கால சந்ததியினரை பாழாக்கி விடாதீர்கள்: சிம்பு-அனிருத் விவகாரம் பற்றி முக்தா சீனிவாசன் அறிக்கை - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 22 December 2015

வருங்கால சந்ததியினரை பாழாக்கி விடாதீர்கள்: சிம்பு-அனிருத் விவகாரம் பற்றி முக்தா சீனிவாசன் அறிக்கை

வருங்கால சந்ததியினரை பாழாக்கி விடாதீர்கள்: சிம்பு-அனிருத் விவகாரம் பற்றி முக்தா சீனிவாசன் அறிக்கைதமிழ் சினிமாவில், 65 ஆண்டு கால அனுபவம் உள்ள பட அதிபர்-டைரக்டர், முக்தா சீனிவாசன். சிம்பு- அனிருத் ‘பீப்’ பாடல் விவகாரம் தொடர்பாக இவர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

‘‘பாலுணர்வு தொனிக்கும் ‘பீப்’ பாடல் என்கிற பாடலை இரு இளைஞர்கள் பதிவு செய்து, அதை பரவலாக வினியோகித்து இன்று கண்டனத்துக்கும், போலீஸ் வழக்குகளுக்கும் ஆளாகியுள்ளார்கள். இது தேவையற்ற வேலை. இன்றைய திரைப்பட பாடல்களை வேறு முறைக்கு திருப்பும் தவறான வேலை இது.

அந்தக் காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் சுவையாகவும், அறிவாற்றல் கொண்டதாகவும், அறிவுரை சொல்வதாகவும் இருந்தன. ‘‘மண்ணுக்கு மரம் பாரமா...மரத்துக்கு இலை பாரமா...பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?’’ என்ற பாடலில் இலக்கியமும், அறிவுரையும் இருந்தது.

‘‘தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்று பெயர் வாங்காதே’’ என்ற பாடலில் எம்.ஜி.ஆர். எத்தனை கருத்துக்களை சொன்னார்?

இன்றைய தலைமுறை கலைஞர்களை பாதம் தொட்டு வேண்டுகிறேன். வருங்கால சந்ததிக்கு தவறான வழிகாட்டி, பாழாக்கி விடாதீர்கள். மரபுகளையும், பண்புகளையும் மாசுபடுத்தி விடாதீர்கள்.

அடுத்த தலைமுறையில் வாழப்போகிறவர்கள் நமது பேரன்கள்தான். அவர்களுக்கு நல்ல புத்தி சொல்லாவிட்டாலும், தப்பான புத்தி சொல்லாதீர்கள்.’’

இவ்வாறு முக்தா சீனிவாசன் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages