தங்க மகன் யூனிட்டில் தெறி படப் புகழ் - எமி - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 27 December 2015

தங்க மகன் யூனிட்டில் தெறி படப் புகழ் - எமி

எமி ஜாக்சனும், தனுஷும் ‘தங்க மகன்’ படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். எமியின் இங்கிலாந்து இங்கிலீஷ், இங்கிருக்கும் எல்லா தங்கிலீஷுக்கும் இஞ்சி முறப்பா கொடுக்கும் போலிருக்கிறது.

தடபுடவென்று அவர் பேசும் வேகத்தில், தடுமாறிப் போனது யூனிட் என்றால், முதல் தடுமாற்றமே தனுஷிடமிருந்துதானாம். “ஆத்தா... கொஞ்சம் நிறுத்திப் பேசுங்க. புரியணும்ல?” என்று இவர் கலாய்க்க, “ஆத்தா...? வாட் ஆத்தா?” என்று அவர் திரும்பிக் கேட்டு தெளிவு பெற்றதெல்லாம் தங்க மகன் யூனிட்டின் தெறி காமெடி. ஆங்... தெறின்னு சொன்னதும்தான் நினைவுக்கு வருது. தெறி படத்தில் விஜய் ஜோடியாக நடிப்பதும் எமிதான். தங்க மகன் யூனிட்டில் வந்து தெறி படப் புகழ் பரப்பிக் கொண்டிருப்பாராம். நல்லவேளை... தனுஷுக்கு குறுகிய புத்தி இல்லாமல் போனதால், அவரும் சேர்ந்து அதை கேட்டு ரசித்தாராம். எமி எதை சொன்னாலும் ரசிக்கிற மொமென்ட்லதான் இருக்கு உலகம்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages