நிறைய படங்களில் நடித்தால் பெரிய நடிகை இல்லை: தீபிகா படுகோனே - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 21 December 2015

நிறைய படங்களில் நடித்தால் பெரிய நடிகை இல்லை: தீபிகா படுகோனே

                             1934538
‘பாலிவுட்’ முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே.
இந்த ஆண்டு மட்டும் அமிதாப் பச்சனுடன் ‘பிகு’ ரன்பீர் கபூருடன் ‘தமாஷா’ வரலாற்று படமான ‘பிஜி ராவோ மஸ்தானி’ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
ஆனால் வருகிற 2016–ல் நடிக்க இது வரை எந்தபடத்தையும் ஒப்புக் கொள்ள வில்லை. ‘தூம் 3’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாத தீபிகா படுகோனோ…
ஒரு திறமையான நடிகை என்பது கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு தன்னை பிசியான நடிகை என்று காட்டிக்கொள்வதில் இல்லை.
முடிவில் கதை எனக்கு பிடிக்க வேண்டும். அதன் பிறகு அதில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். இதை நான் உறுதியுடன் பின்பற்றி வருகிறேன். நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் அவை எனக்கு பிடித்த கதைகளாக இல்லாததால் அதில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
இது நான் நடிக்கும் படம், அது அடுத்தபடம், அதன் பிறகு மற்றொரு படம் என்று தினமும் செய்தி வரவேண்டும் என்ற கட்டாயத்தில் நான் இல்லை. எனவே, பொறுமையாக காத்திருந்து கதையை தேர்வு செய்கிறேன் என்கிறார்.
மார்க்கெட் சரிவதை மாற்றிச் சொல்கிறாரா? என்று இந்தி பட உலகினர் தீபிகாபடுகோனேவை கிண்டல் செய்கிறார்களாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages