தனுஷ் நடித்த தங்கமகன் டிசம்பர் 18 இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து பிரபசாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துமுடித்துவிட்டார். அதற்கடுத்து துரைசெந்தில்குமார் இயக்கத்தில் கொடி படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.
வடசென்னை படத்துக்கு முன்பாக செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிடத் திட்டமிட்டிருக்கிறாராம் தனுஷ்.
எனவே கொடி படப்பிடிப்பு முடிவடைந்ததும் அல்லது அதற்கு நடுவிலோ செல்வராகவன் படத்தைத் தெடங்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இப்படி ஒரு படம் எடுப்பதற்காகத்தான் சிம்பு நடித்த கான் படத்தை செல்வராகவன் நிறுத்திவைத்துவிட்டார் என்று முன்பே சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தங்கமகன் படம் முடிந்ததும் வடசென்னை படம் தொடங்கப்படும் என்று பல மாதங்களுக்கு முன்பாகவே தனுஷ் சொல்லியிருந்தார்.
ஆனால் தங்கமகனையடுத்து பிரபுசாலமன் படம் அதற்கடுத்து கொடி அதற்கும் அடுத்து செல்வராகன் படம் என்பதால் வடசென்னை மீண்டும் தள்ளிப்போய்விட்டதாக கூறப்படுகின்றது.
- See more at: http://cinema.vannimedia.com/news/1762.html#sthash.6HC4eToh.dpuf
No comments:
Post a Comment