மாதவன் நடித்த படம் 6 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறது
மாதவன் ஹீரோவாக நடித்த அலைபாயுதே, ரன் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்றன. 2009–ல் ‘குரு என் ஆளு’ என்ற படத்தில் மாதவன் தனி ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு ‘மன்மதன் அன்பு’ படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்தார். ‘வேட்டை’யில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார். பின்னர் தனி ஹீரோவாக நடிக்கவில்லை.
இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். 6 வருடங்களுக்குப் பிறகு மாதவன் மீண்டும் தனி கதாநாயகனாக ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்துள்ளார். இந்தியிலும், தமிழிலும் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்து இருக்கிறார்.
17 வயது குத்துச்சண்டை வீராங்கனைக்கு பயிற்சி அளித்து, அவரை உலகப் புகழ் பெற வைப்பதாக கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் குத்துச்சண்டை வீராங்கனையாக ரித்திகா நடித்துள்ளார். இவர் உண்மையான வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த டிரைலரை பார்த்த கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். ஜனவரி 4–ந் தேதி ‘இறுதிச்சுற்று’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதன் இந்தி பதிப்பை மாதவன் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணியுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
தமிழ் பிரதியை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சி.வி.குமார், ஒய்நாட் ஸ்டூடியோ சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்
No comments:
Post a Comment