சிம்புவின் மிரட்டல், டி.வி.நிருபர் அப்செட் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 27 December 2015

சிம்புவின் மிரட்டல், டி.வி.நிருபர் அப்செட்

தமிழின் முன்னணி செய்தி சேனல் ஒன்றில் சினிமா நிகழ்ச்சி வருகிறது.

அதை ஒருங்கிணைத்த வீடியோ ஜாக்கி ஒருவர், சிம்புவை பற்றி விமர்சிக்க என்ன கஷ்டகாலமோ? அந்த ஒளிபரப்பை மட்டும் ரெண்டு கண்ணால் பார்த்துவிட்டார் சிம்பு. எப்படியோ சம்பந்தப்பட்ட வீடியோ ஜாக்கி நம்பரை வாங்கி, குரல் மாற்றி பேசினாராம். அதில் ஏகப்பட்ட அட்வைஸ்களும் எக்கச்சக்க திட்டுகளும் வந்து விழுந்தனவாம். அது சிம்புதான் என்று தெரிந்தும், யாரோ பேசுவது போல அவர் பேசுவதை ஏன் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ள வேண்டும் என்று இவரும் அமைதியாகிவிட்டார். அதற்கப்புறம் நடந்ததுதான் செம ஷாக். அந்த வீடியோ ஜாக்கியின் நம்பரை தன் ரசிகர் மன்றத்தினரிடம் கொடுத்து ஐந்து நிமிடத்திற்கொரு அர்ச்சனை செய்ய வைத்திருக்கிறார் சிம்பு. போனில் வந்த அத்தனை பேரும், நாறிப்போன வார்த்தைகளால் ஊற வைத்து அடிக்க, நொந்தே போய்விட்டார் ஜாக்கி. இனி காலி கிரவுண்ட்ல கூட ஹாக்கி ஆட மாட்டாரு போல.

v

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages