வெள்ளமும் விஜய் சேதுபதி ரீயாக்ஷனும் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 27 December 2015

வெள்ளமும் விஜய் சேதுபதி ரீயாக்ஷனும்

இந்த வெள்ளம் பலரது முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிட்டது. முக்கியமாக நம்ம ஊர் டாப் ஸ்டார்ஸ் சிலரது முகத்தில்! கொடுக்கணுமா, வேணாமா? கொடுக்கலேன்ன என்ன? கொடுத்தால்தான் என்ன? என்றெல்லாம் குழம்பி, வெம்பி... பத்தையோ பதினைந்தையோ லட்சங்களில் எறிந்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள். ஆனால் பக்கத்து மாநில ஹீரோவான பவன் கல்யாண் வெள்ள நிவாரண நிதியாக இரண்டு கோடி ரூபாய் தருவதாக அறிவித்திருக்கிறார். “ஏற்கனவே தர்ல... தர்ல...ன்னு புலம்புறானுங்க. இதுல இவரு வேற” என்று முகமெல்லாம் கோணலாகி நிற்கிறது நம்ம ஊர் ஹீரோக்களின் முகம்! இதில் நடிகர் பரத் மாதிரி சில நடிகர்களின் செயல் சந்தோஷம் தருகிறது. சுத்தமாக மார்க்கெட் டவுன். படமும் இல்லை. இருந்தாலும் தன் அளவுக்கு சில நூறு போர்வைகள், துணி மணிகளுடன் தன் வீட்டிற்கு அருகிலிருக்கும் ஏரியாவுக்கு சென்று வழங்கிவிட்டு சப்தம் போடாமல் திரும்பிவிட்டார். சுமார் ஐந்து லட்சம் பெருமானமுள்ள உதவிப் பொருட்களுடன் சென்ற விஜய் சேதுபதி, ஆர்ப்பாட்டமேயில்லாமல் ஒருவரைவிட்டு விநியோகித்துவிட்டு திரும்பிவிட்டார். கத்துக்கங்க டாப்ஸ்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages