பீப் சாங்க் தாய் குலம்ஸ் கோபத்தில் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 27 December 2015

பீப் சாங்க் தாய் குலம்ஸ் கோபத்தில்

தன்மான சிங்கம்... தரலோக்கலு தங்கம்... டி.ராஜேந்தரெல்லாம் இந்த மழை வெள்ளத்தில் எங்கு போனாரென்றே தெரியவில்லை.

வார்த்தைக்கு வார்த்தை தமிழன்டா என்று மாரில் அடித்துக் கொள்ளும் அவர், சு-மாராக கூட உதவவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்பா லைம் லைட்டுக்கு வராத குறையை மகன் சிம்பு போக்கிவிட்டார். சமீபத்தில் இவரும் மியூசிக் டைரக்டர் அனிருத்தும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். அது அன் அபீசியலாக இணையத்திலும் கசிந்துவிட்டது என்பதெல்லாம் பழைய செய்தி. பாடலை கேட்டால் உங்கள் கண்களும் கோபத்தால் கசியும். 18 வயசுக்கு மேலுள்ளவர்கள் மட்டும் கேட்கவும் என்று குறிப்பிட்டே வந்திருக்கும் அந்த பாடலில் பெண்களின் கவுரவத்தை பிரித்து அறுத்து ஊறுகாய் போட்டிருக்கிறார்கள் இருவரும். ‘உன்ன விட்டுட்டோமேனு அவ அழுவனும் டா..’ இதுதான் பாடலின் நடுவே வருகிற ஒரு வரி. மற்ற வரிகளெல்லாம் உவ்வே... இந்த பாடலை ஏண்டா வெளியே வுட்டோம்னு அவிங்ய்க அழுவுற மாதிரி தாய்குலம்ஸ் போராட்டாத்தில் குதித்து இப்போது போலீஸ் கேஸ் வரை போய், இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages