கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை! - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 16 December 2015

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை!

                                     
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலை 7 மணிக்கு அமலாக்கத்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் திடீரென வந்தனர்.

பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் அலுவலகத்தில் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கார்த்தி சிதம்பரம் உடன் இருந்தார். தொடர்ந்து அதிகாரிகள், கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இப்போது சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டனர்.

இதனிடையே, சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் தொடர்பான புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவது காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages