எத்தனை கஷ்டம் வந்தாலும் தமிழகத்திலேயே இருப்பேன்: டி. ராஜேந்தர் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 27 December 2015

எத்தனை கஷ்டம் வந்தாலும் தமிழகத்திலேயே இருப்பேன்: டி. ராஜேந்தர்

எத்தனை கஷ்டம் வந்தாலும் தமிழகத்திலேயே இருப்பேன்: டி. ராஜேந்தர்


                         

'எத்தனை இடி விழுந்தாலும், மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும் டி.ராஜேந்தர் தமிழ்நாட்டில் தான் இருப்பான்' என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற யாகத்திற்கு பிறது செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் டி.ராஜேந்தர்.
டி.ராஜேந்தர் மகனும் பிரபல தமிழ் நடிகருமான சிம்பு என்ற சிலம்பரசன் பாடியதாக ஒரு பீப் பாடல் இணையதளம் மூலம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி, சிம்பு மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை இணையகுற்ற தடுப்புப் போலீஸாரும், கோவை போலீஸாரும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகத்தை டி.ராஜேந்தர் நடத்தினார்.
இதில் பங்கேற்றப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செய்யாத குற்றத்துக்கு சிலர் சதி செய்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் சிம்புவுக்கு பக்கபலமாக அவருடைய ரசிகர்கள் நிற்கிறார்கள். எங்களுக்கு ஆதரவளித்த அமைப்புகள், தாய்மார்கள், பெண்கள் அமைப்புகளை மறக்க மாட்டேன்.
சிம்பு எங்கும் தலைமறைவாகவில்லை. சட்டரீதியாக அவர் பிரச்சினைகளை எதிர்கொள்வார்.
என் மகன் தமிழ்நாட்டை விட்டு அல்ல, இந்தியாவை விட்டு ஓடி ஒளிய மாட்டான். எந்த காவல் நிலையத்தில் அவனை ஒப்படைக்க வேண்டும், ஒப்படைக்கிறோம் என்று சொன்ன தமிழச்சி என் மனைவி.
எத்தனை இடி விழுந்தாலும், மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும் டி.ராஜேந்தர் தமிழ்நாட்டில் தான் இருப்பான். எதிர்த்து நிற்பான், குரல் கொடுப்பான் என்றார்.
முன்னதாக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பீப் பாடல் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மன உளைச்சலால் "தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறோம்" என்று அவர் பேசியிருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages